உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ரோஜா, ரிதம்' படங்களின் புகழ் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்

‛ரோஜா, ரிதம்' படங்களின் புகழ் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்

பல படங்களில் குணச்சித்ர வேடங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்த வத்சலா ராஜகோபால் (93) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்னையால் சென்னையில் காலமானார்.

நாடக நடிகையை தனது கலைப்பயணத்தை துவக்கிய வத்சலா, நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய ‛ரோஜா' படத்தின் மூலம் சினிமா பயணத்தை துவக்கிய இவர், ‛‛சதி லீலாவதி, காலமெல்லாம் காதல் வாழ்க, ரிதம், ஜூலி கணபதி, அந்நியன், மொழி'' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ‛கல்யாண சமையல் சாதம்' படத்தில் நடித்தார்.

சினிமா தவிர்த்து ‛சித்தி, ஆனந்தம், மை டியர் பூதம், சொர்க்கம், மகள், முந்தானை முடிச்சு, புது கவிதை'' உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக பாலு மகேந்திராவின் கதை நேரத்தில் பல எபிசோடு நடித்துள்ளார். அப்புசாமியும் சீதாப்பாட்டியும், பல்லாங்குழி, கையளவு மனசு, மனிதரில் இத்தனை நிறங்களா ,உட்பட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

வயோதிகம் மற்றும் லிவர் பிரச்னை காரணமாக இன்று(அக்., 30) அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில் சென்னை, பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இன்று மாலை 3 மணிக்கு மேல் குரோம்பேட்டையில் இறுதி சடங்கு நடக்கிறது. கண்ணன், சுரேஷ், சிவாஜி ஆகிய மகன்களும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர். கணவர், ஒரு மகன் காலமாகிவிட்டார். அவர் மறைவுக்கு சின்னத்திரை நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !