உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கீர்த்தியுடன் மோதுவது அதிகாரத்திற்காக அல்ல: ராதிகா ஆப்தே

கீர்த்தியுடன் மோதுவது அதிகாரத்திற்காக அல்ல: ராதிகா ஆப்தே


யஷ் ராஜ் பிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள வெப் தொடர் 'அக்கா'. நெட்பிளிக்ஸ் ராதிகா ஆப்தே, கீர்த்தி சுரேஷ், தன்வி ஆஸ்மி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அன்ஷூமன் புஷ்கர், மோனிகா பன்வார் உள்ளிட்ட பலர் இத்தொடரில் நடித்துள்ளனர். ஜான் ஸ்டீவர்ட் எடுரி இசையமைத்துள்ளார். தர்மராஜ் ஷெட்டி இயக்கி உள்ளார்.

இதில் கீர்த்தி சுரேஷ் தனது பாரம்பரிய சாம்ராஜ்யத்தை காக்க போராடுகிறவராகவும், சாம்ராஜ்யத்தை கைப்பற்ற போராடுகிறவராக ராதிகா ஆப்தேவும் எதிரெதில் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தொடரில் நடித்திருப்பது பற்றி ராதிகா ஆப்தே கூறியிருப்பதாவது:

தான் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளால் தனக்கான அடையாளம் தீர்மானிக்கப்படுவதை ருத்ரா (ராதிகா நடிக்கும் கேரக்டர்)ஒருபோதும் அனுமதிக்க மாட்டாள். அவள் துணிச்சலானவள், லட்சியவாதி, ஏற்கெனவே இருக்கும் அதிகார அமைப்பையே எதிர்த்துக் கேள்வி கேட்கத் தயங்காதவள். அதனால்தான் அவளுடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமானது.

கதைப்படி நான் கீர்த்தி சுரேஷை எதிர்த்து போராடுவது அதிகாரத்தை அடைவதற்கான போட்டியாக பார்க்கவில்லை. இங்கு மோதல் என்பது யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது மட்டுமல்ல. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயக்கும் வெவ்வேறு நம்பிக்கைகள், விசுவாசங்கள் மற்றும் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் முக்கியமான விஷயங்களும் இந்த மோதலுக்குக் காரணமாக இருக்கின்றன.

எது சரி, எது தவறு என்ற வழக்கமான வரையறைகளின் அடிப்படையில் ருத்ரா செயல்படுவதில்லை. மாறாக, தனது நம்பிக்கைகளுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்பச் செயல்படுகிறாள். கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் ருத்ரா. எங்களின் இரு கதாபாத்திரங்களுக்கும் இடையிலான மோதலே தொடரின் மையக்கருவாக அமைகிறது. என்கிறார் ராதிகா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !