‛ராமாயணா' படத்திற்கு சாய் பல்லவி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ராமாயணா படம் வருகிற நவம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் சாய் பல்லவி தனது திரைப்பயணத்திலேயே மிகவும் சவாலான சீதை வேடத்தில் நடித்துள்ளார். ராமாயணா படத்தில் ஒரு பாகத்திற்கு 6 கோடி வீதம் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சாய்பல்லவிக்கு ரூ. 12 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை அவர் வாங்கிய சம்பளங்களிலேயே இதுவே மிக அதிகம் என்கிறார்கள்.
தென்னிந்தியாவில் தனது அசாத்திய மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் சாய் பல்லவி பெருமளவிலான ரசிகர்களைப் பெற்றுள்ளார். இருப்பினும், இந்திய இதிகாசத்தில் மிகவும் வணங்கப்படும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது பெரும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய பொறுப்பாகும். மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சீதை கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி கொடுத்துள்ள நடிப்பு ரசிகர்கள் மத்தியில் எத்தகைய வரவேற்பை பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.