உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: விஜய்காக பெயரை மாற்றிய நடிகர்

பிளாஷ்பேக்: விஜய்காக பெயரை மாற்றிய நடிகர்


தற்போது தலைவாசல் விஜய் என்று அழைக்கப்படுகிற குணசித்ர நடிகரின் இயற்பெயர் சி.ஆர்.விஜயகுமார். அவர் அறிமுமான படம் 'தலைவாசல்' அல்ல. 'சிவந்த மலர்' என்ற படத்தின் மூலம் கேயார்தான் அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் சரத்குமாரும், கவுதமியும் நடித்தனர். இதில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தார்.

இதற்கு அடுத்த படம்தான் 'தலைவாசல்'. முதல் படம் வெளியானதில் இருந்து பல மாதங்களுக்கு பிறகு இந்த படம் வெளியானது. இதில் அவரது நடிப்பு பேசப்பட்டு பரவலாக அறியப்பட்டார். இதே ஆண்டின் இறுதியில் விஜய் நடித்த 'நாளைய தீர்ப்பு' வெளியானது. 'ஜோசப் விஜய்' என்ற இயற்பெயர் கொண்டவர், விஜய் என்ற பெயரில் அறிமுகமானார். அதற்கு முன்பு அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்களிலும் அவர் விஜய் என்ற பெயரிலேயே நடித்தார்.

இதனால் வரும்காலத்தில் பெயர் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக தனது பெயருக்கு முன்னால் தான் நடித்து புகழ்பெற்ற 'தலைவாசல்' படத்தை இணைத்துக் கொண்டு தலைவாசல் விஜய் ஆனார். வில்லனாக, குணசித்ர நடிகராக 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் தலைவாசல் விஜய். மலையாளத்தில் ஸ்ரீநாராயணகுருவின் வாழ்க்கை படமான 'யுகபுருஷனில்' ஸ்ரீநாராயணகுருவாக நடித்து பல்வேறு விருதுகளை பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !