உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மிர்ணாவின் சிறு வயது 'க்ரஷ்' ஹிருத்திக் ரோஷன்

மிர்ணாவின் சிறு வயது 'க்ரஷ்' ஹிருத்திக் ரோஷன்

'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிகாந்த் மருமகளாக நடித்திருப்பவர் மலையாள நடிகை மிர்ணா. முதல் பாகத்தில் மிர்ணாவுக்கு நிறைய காட்சிகள் இருந்தன. இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் குறைவுதான். இருந்தாலும் அவருக்கென சில உணர்வுபூர்வமான காட்சிகள் படத்தில் இருந்தன.

'ஜெயிலர் 2' படம் வெளியான பிறகு ரஜினியுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து இரண்டு பதிவுகளைப் போட்டு ஒரு மில்லியன் லைக்குகளை அள்ளியிருந்தார் மிர்ணா.

தற்போது படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “சிறுவயது க்ரஷ், நான் எப்போதும் வியந்து பார்க்கும் நாயகன். அவருடன் ஒரே திரையில் தோன்றும் இந்த அனுபவம் ஏதோ ஒரு கனவு போல இருக்கிறது.

'ஜெயிலர் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷன் உடன் பணியாற்றியது மிகவும் சிறப்பான ஒன்று. சூப்பர் ஸ்டாருக்குப் பின்னால் இருக்கும் அந்த மனிதரை நேரில் தெரிந்து கொண்டது, இந்த அனுபவத்தை இன்னும் அழகாக்கியது. மிகவும் அன்பானவர், எளிமையானவர், இயல்பான மனிதர். அவர் மீதான எனது மரியாதையும் அபிமானமும் இன்னும் பலமடங்கு அதிகரித்துள்ளன.

வாழ்க்கையில் சில தருணங்கள் ஒருமுறை மட்டுமே அமையும்; இதுவும் அத்தகைய தருணங்களில் ஒன்று,” என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !