உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருள்நிதியின் ‛வேட்ட சாமி' படம் டிசம்பரில் வெளியாகிறது

அருள்நிதியின் ‛வேட்ட சாமி' படம் டிசம்பரில் வெளியாகிறது

2023-ல் வெளியான பம்பர் என்ற படத்தை இயக்கிய எம்.செல்வகுமார், தற்போது இயக்கியுள்ள படம் வேட்ட சாமி. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இப்படத்தின் முதல் தலைப்பு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் ஒரு கிராமத்து கோயில் திருவிழா, அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் மற்றும் வழிபாட்டுப் பாடல்களுடன் கொண்டாட்டங்கள் காண்பிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து அருள்நிதி கருப்பசாமி வேடத்தில் தோன்றினர். சூர்யாவின் கருப்பு படத்தைப் போலவே, இந்த முதல் பார்வையும் மற்றொரு விறுவிறுப்பான தெய்வீக அனுபவத்தை அளிப்பதாக இருந்தது. இந்த வேட்ட சாமி படத்தை வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேரடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி, இயக்குநர் தமிழ், கவிதா பாரதி, சதீஷ் கண்ணன், அயாஸ் கான், முரளி அப்பாஸ், ஆறு பாலா, டி.எஸ்.கே, ஓ.ஏ.கே. சுந்தர், அர்ஜாய், நந்தினி, சேரன்ராஜ், ஜெகன் கவிராஜ், பிரோஸ், தனுஷ் கார்த்திக், சஞ்சய் மற்றும் ஜாஷிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !