சந்தானத்தின் 'லவ் பைட்' படப்பிடிப்பு நிறைவு : டிசம்பரில் ரிலீஸ்
ADDED : 13 hours ago
சந்தானம் நடித்து வந்த புதிய படத்திற்கு 'லவ் பைட்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'காஞ்ஜுரிங் கண்ணப்பன்' படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் இயக்கி உள்ளார். சந்தானத்துடன் அபர்ணா தாஸ், ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டியோ பாக்ஸன் இசை அமைக்கிறார், எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவை சந்தானம், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.