உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கின

பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கின

விஜய் சேதுபதி முதன்மை வேடத்தில் நடிக்கும் பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு உடனடியாகத் தொடங்கியது. சமீபத்தில், நடிகை மாளவிகா மோகனன் தனது படப்பிடிப்புப் பகுதிகளை நிறைவு செய்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து, தற்போது ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாகத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் நட்சத்திரப் பட்டாளத்தில் ராஜ் பி ஷெட்டி மற்றும் கிஷோர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். வதந்தி வெப் தொடரின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் பாக்கெட் நாவல் படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 2019ல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜாவுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ள படம் பாக்கெட் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !