உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செல்ல நாயின் பின்னணியில் உருவாகும் முகேன் ராவ்வின் 'மைலோ'

செல்ல நாயின் பின்னணியில் உருவாகும் முகேன் ராவ்வின் 'மைலோ'

எஸ்எஸ்ஆர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கே.சுரேஷ் தயாரிக்கும் படம் 'மைலோ'. செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ளார். கவின் மூர்த்தி இயக்கியுள்ளார். முகேன் ராவுடன் தேஜு அஸ்வினி, இளவரசு, முனீஷ்காந்த், பிக்பாஸ் புகழ் ஜனனி, இந்திரஜா, சுரேஷ் மேனன், ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் கூறும்போது “18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு குற்றத்தையும், 'மைலோ' எனும் செல்ல நாயையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையைச் செல்ல நாயின் உதவியுடன் நாயகன் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே இப்படத்தின் மையக்கருவாகும். அனைத்து விதமான கமர்ஷியல் அம்சங்களுடன், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !