ராமாயணா இரண்டாம் பாகம் 2028-க்கு தள்ளிவைக்கப்பட்டதா?
ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிக்கும் ராமாயணா பாகம் ஒன்று படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. அதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராமாயணா 2 படம் 2028ம் ஆண்டு தீபாவளிக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக பாலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது.
காரணம், நமித் மல்ஹோத்ரா மற்றும் நிதேஷ் திவாரி ஆகியோர் உலகத் திரைப்பட வரிசையில் மிகவும் புதுமையான சண்டைக் காட்சிகளை உருவாக்க விரும்பியதால், அதற்கான வடிவமைப்பிற்கு எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக காலம் தேவைப்படுகிறதாம். ராமாயணா திரைப்படம் மூலம் உலக அளவில் தடம் பதிக்கும் என்பதில் நமித் நம்பிக்கையுடன் இருக்கிறார். எனவே ராமாயணா 2 படத்தின் பிரம்மாண்டத்தை மேலும் உயர்த்த அவர் முடிவு செய்துள்ளார்.
இந்தியக் கதையை உலகத் தரத்திற்குக் கொண்டு செல்லும் தனது தொலைநோக்குப் பார்வை காரணமாக ராமாயணா 2 படத்திற்கு இன்னும் கூடுதல் படப்பிடிப்பு நேரம் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. விரைவில் இரண்டாம் பாகத்திற்கான புதிய வெளியீட்டுத் தேதியை ராமாயணா பாகம் ஒன்று படத்தின் இறுதியில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.