உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவின் காமெடியை குடும்பத்தோடு ரசிக்கலாம் : 'சீன்' இயக்குநர் சொல்கிறார்

சூர்யாவின் காமெடியை குடும்பத்தோடு ரசிக்கலாம் : 'சீன்' இயக்குநர் சொல்கிறார்

ரோமான்சம், ஆவேசம், பாலன் தி பாய் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிப்பில் இயக்கி வரும் படம் 'சீன்'. சூர்யாவுடன் நஸ்ரியா நசிம், ஆனந்த்ராஜ், நெல்சன், லால், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சுசின் ஷியாம் இசை அமைக்கிறார். 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா தயாரிக்கிறார்கள்.

படம் குறித்து ஜித்து மாதவன் கூறியிருப்பதாவது: இது ஆக்ஷன், திரில்லர் கலந்த காமெடி படம். கதை கேட்கும்போதே சூர்யா சிரித்துக் கொண்டே கேட்டார். சிரித்துக் கொண்டே நடித்தார். நஸ்ரியாவும் கதையை கேட்ட உடன் நடிக்க ஒப்புக் கொண்டார்.

போலீஸ் அதிகாரியாக இருந்த ஒருவர், அதிலிருந்து விலகி வந்த பிறகு பழைய வழக்கு ஒன்றை விசாரணை செய்ய வேண்டியிருக்கிறது. அவரிடம் அதற்கான டீம் இல்லை. அவராகவே ஒரு டீமை உருவாக்குகிறார். அந்த டீம் விசித்திரமான டீமாக அமைந்துவிடுகிறது. ஆனால் எதிரியிடம் வலுவான புத்திசாலித்தனமாக டீம் இருக்கிறது. இரண்டு டீம்களின் ஆடுபுலி ஆட்டம்தான் படம். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக பார்க்கும் வகையில் படம் இருக்கும் என்றார். ஜித்து மாதவன் இயக்கிய 'ஆவேசம்' படமும் இந்த வகையான படம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

இளந்திரயன் வேலந்தாவளம்
2026-10-24 16:46:29

balan the boy director name is chithamparam...