ஒரு வார வசூல் : லியோ Vs ஜெயிலர் 2
ADDED : 1 days ago
ரஜினிகாந்த் நடிக்க, நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த 'ஜெயிலர் 2' படம் உலக அளவில் ஒரு வாரத்தில் 549 கோடி வசூலித்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
உலக அளவில் முதல் வாரத்தில் அதிக வசூலைக் குவித்த படமாக இருந்த 'லியோ' படத்தின் 461 கோடி வசூலை 'ஜெயிலர் 2' படம் முறியடித்துள்ளது. இது நேற்றிலிருந்து ரஜினி, விஜய் ரசிகர்களிடம் ஒரு மோதலை ஏற்படுத்தியுள்ளது.
2023 அக்டோபர் 26ம் தேதியன்று 'லியோ' தயாரிப்பு நிறுவனம், “பல ராஜாக்களை பாத்தாச்சு மா, நீ ஒரசாமா ஓடிடு,” என்று குறிப்பிட்டு, 461 பிளஸ் கோடிகள், தமிழ் சினிமா வரலாற்றில் 7 நாட்களில் அதிக வசூலைக் குவித்துள்ளது,” என்று பதிவிட்டுள்ளார்கள்.
மூன்று வருடங்களாக இருந்த அந்த சாதனையை கூடுதலாக 88 கோடி வசூலித்து 'ஜெயிலர் 2' படம் முறியடித்துள்ளது.