உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தனுஷ் 56' பட வாய்ப்பு கிடைத்தது எப்படி?: ப்ரீத்தி முகுந்தன்

'தனுஷ் 56' பட வாய்ப்பு கிடைத்தது எப்படி?: ப்ரீத்தி முகுந்தன்


'ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ப்ரீத்தி முகுந்தன், அடுத்து 'கண்ணப்பா, சர்வம் மாயா, பிளாஸ்ட், இதயம் முரளி, அன்பில் அவன்' என அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 56வது படத்தில் நாயகியாக கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில் சிவகங்கையில் நடந்த பட பூஜையில் பங்கேற்றார்.

இந்த நிலையில் இப்பட வாய்ப்பு கிடைத்தது பற்றி அவர் கூறியதாவது: 'தனுஷ்56' படத்திற்காக முறையாக ஆடிஷனில் பங்கேற்றேன். ஒரு திரைப்படத்தைத் தேர்வு செய்யும்போது, இயக்குனர் கதையை விவரிக்கும் விதத்தையும், கதாநாயகியின் கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிப்பேன். திரைத்துறையின் ஆரம்பகாலத்தில் சில கதைகளைத் தவறாகத் தேர்வு செய்தேன். அந்த அனுபவத்தின் மூலம் சரியான கதைகளைத் தேர்ந்தெடுக்கக் கற்றுக்கொண்டேன்.

ஒரு படத்தில் நடிப்பதற்கான தேர்வில் ஆடிஷன் என்பது இயல்பான நடைமுறை. பல படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகை என்பதற்காக ஆடிஷனில் இருந்து விலக்கு அல்லது சலுகையை நான் எதிர்பார்ப்பதில்லை. தனுஷின் படத்திற்காகவும் ஆடிஷனில் பங்கேற்றுதான் தேர்வானேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !