உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெற்றி, வாணி போஜனின் 'ரேவன்'

வெற்றி, வாணி போஜனின் 'ரேவன்'

சினிமாவில் அறிமுகமாகி 16 ஆண்டுகளான நிலையில் 12 படங்களில் மட்டுமே நடித்துள்ளார் வாணி போஜன். சின்னத்திரையில் இருந்து வந்த நடிகைகளில் இவரும் ஒருவர். 2010ல் ஓர் இரவு படத்தில் அறிமுகமாகி ‛ஓ மை கடவுளே, லாக் அப், மகான், மிரள், லவ், அஞ்சாமை, கேங்கர்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் சில வெற்றி பெற்றிருந்தாலும் வாணி போஜனுக்கான உரிய இடம் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அவர் தற்போது வெற்றி நடிக்கும் ரேவன் படத்தில் நடித்து வருகிறார். கருணாஸ், அனுமோல், ரவீணா, விஷ்வமித்ரன், 'ராட்சசன்' வினோத் சாகர், சரவணன் ஷக்தி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படம் தனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் வாணி.

படம் குறித்து இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் கூறும்போது “ரேவன் ஒரு க்ரைம் த்ரில்லர் படம். எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன் எழுதிய 'படுகளக் காதை' நாவலைத் தழுவி இப்படத்திற்கான கதையை உருவாக்கியிருக்கிறேன். குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சுமார் 30 கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட ஒரு தொடர் கொலையாளி கைது செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தின் தாக்கமும் இந்தத் திரைக்கதையின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

அந்த உண்மைச் சம்பவத்தை அப்படியே பதிவு செய்யாமல், அதன் தாக்கத்தில் ஒரு விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். விறுவிறுப்பைத் தாண்டி, நமது சமூகத்தில் நீண்டகாலமாகப் புரையோடிப் போயிருக்கும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்னையையும் 'ரேவன்' அழுத்தமாகப் பேசுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

இளந்திரயன் வேலந்தாவளம்
2026-10-16 17:16:40

malaysia to amnesia படத்தில் வாணியின் இயல்பான நடிப்பை விட்டுவிட எப்படி அய்யா மனசு வந்தது.. கல் நெஞ்சகாரற் அய்யா நீர்