உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்ரீலீலாவின் ஹிந்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஸ்ரீலீலாவின் ஹிந்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹிந்தியில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக தனது முதல் படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீலீலா. அனுராக் பாசு இயக்கும் இப்படம் ஒரு இசை சார்ந்த காதல் படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தலைப்பிடப்படாத இந்த காதல் படம் 2027ம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாவதாக அறிவித்துள்ளார்கள்.

ஆரம்பத்தில் இப்படத்துக்கு ஆஷிகி 3 என்று டைட்டில் வைத்திருப்பதாக செய்தி பரவியது. ஆனால் சமீபத்திய தகவல்களின்படி, இப்படத்திற்கு, து மேரி ஜிந்தகி ஹை என்று தலைப்பிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது ஆஷிகி தொடருடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு புதிய காதல் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு பிரீதம் இசையமைக்கிறார். டி-சீரிஸ் நிறுவனத்தின் சார்பில் பூஷன் குமார் தயாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !