உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2 : முதல் நாள் வசூல் 120 கோடி பிளஸ்

ஜெயிலர் 2 : முதல் நாள் வசூல் 120 கோடி பிளஸ்

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், நேற்று வெளியான படம் 'ஜெயிலர் 2'. இப்படத்தின் முதல் நாள் வசூலாக 120 கோடிக்கும் அதிகமாக வசூலாகி இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட இந்தியாவில் மட்டும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இப்படம் வெளியாகவில்லை. தென்னிந்தியாவில் அனைத்து விதமான தியேட்டர்களிலும் அதிக அளவில் வெளியாகி உள்ளது. நான்கு வார ஓடிடி வெளியீடு காரணமாக வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இப்படத்தைத் திரையிடவில்லை. இல்லை என்றால் இன்னும் அதிகமான வசூல் கிடைத்திருக்கும் என்கிறார்கள்.

ரஜினிகாந்த் நடித்து கடந்த சில வருடங்களில் வெளியாகிய “கூலி, ஜெயிலர், 2.0, கபாலி' படங்கள் முதல் நாள் வசூலில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது 'ஜெயிலர் 2' படமும் இணைந்துள்ளது. ரஜினிகாந்த் படங்களில் அதிக வசூலான '2.0' படத்தின் 800 கோடி வசூலை இந்தப் படம் கடக்குமா என்பது அடுத்த வாரத்தில் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !