உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூரி படத்தை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

சூரி படத்தை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

'இன்று நேற்று நாளை', 'அயலான்' படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. சூரிக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது. சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, 'மண்டாடி' படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. சூரி நாயகனாக நடிக்கும் 7வது படம் என்பதால் 'சூரி 7' என்று தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படம் பற்றி இயக்குனர் ரவிகுமார் கூறும்போது, “மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கதாநாயகனாக சூரி தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறார். அவரது திறமை மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்யும் வகையில் அவரைத் திரையில் காட்ட வேண்டிய கூடுதல் பொறுப்பு எனக்கு இருக்கிறது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !