உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மம்முட்டியின் ஓம் டப்பிங்கை உன்னிப்பாக கவனித்த ஜெயசூர்யா

மம்முட்டியின் ஓம் டப்பிங்கை உன்னிப்பாக கவனித்த ஜெயசூர்யா

மம்முட்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் என்கிற படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கான தனது டப்பிங் பணிகளை சப்தா ஸ்டுடியோவில் உள்ள டப்பிங் தியேட்டரில் மம்முட்டி பேசினார்.

அந்தசமயம் தனது படம் ஒன்றின் வேலைக்காக அங்கே வந்த மலையாள நடிகர் ஜெயசூர்யாவும், மம்முட்டியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மம்முட்டி மற்றொரு மொழி படத்திற்கு டப்பிங் பேசுவதை அருகில் இருந்து பார்த்தது தனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம் என்று ஜெயசூர்யா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !