வாசகர்கள் கருத்துகள் (1)
அந்த தொகுதி மக்கள் ஒட்டு போட்டுத்தானே ஜெயிச்சிங்க , பதிவிக்கான பென்ஷனும் வருமில்ல.. அதை வேனாம்னு எழுதி குடுத்தாச்சா..
நடிகர் நெப்போலியன் ‛அமெரிக்க ஆவி' என்ற படத்தை தயாரித்து, நடித்து இருக்கிறார். தஞ்சை ஜே பி ஆர் இயக்கியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள நாஷ்வில் பகுதியில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கிரியேட்டிவ் பகுதிகளிலும் நெப்போலியன் பங்காற்றி இருக்கிறார். அவரின் மகன்கள் குணால், தனுஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். அவர் மனைவி ஜெயசுதாவும் படத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். ஆர்ட் டைரக்டராகவும் இருந்து இருக்கிறார். நாஷ்வில் பகுதியில் வசிக்கும் டாக்டர்கள், அதிகாரிகள் படத்தில் நடித்து இருக்கிறார்கள்.
ஒரு புது வீட்டை நெப்போலியன் வாங்குகிறார். அந்த வீடு பின்னணியில் காமெடி கலந்த பேய் படமாக அமெரிக்க ஆவியை உருவாக்கி இருக்கிறார்கள். அமெரிக்காவில் பெப்சி மாதிரியான சினிமா சங்கங்கள், தகுந்த ஆட்கள் குறைவு. எனவே, நெப்போலியன் குடும்பம், படக்குழு கஷ்டப்பட்டு இந்த பணிகளை முடித்து இருக்கிறார்கள். இனியும் சினிமா எடுக்க வேண்டாம். இந்த படத்துடன் போதும் என்று குடும்பத்தினரும் விரும்புகிறார்களாம்.
சமீபத்தில் சென்னையில் அமெரிக்க ஆவி பட டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. விரைவில் படம் ரிலீஸாகிறது. சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த நெப்போலியன் அந்த வீட்டை விற்றுவிட்டார். சென்னை நட்சத்திர ஓட்டலில்தான் தங்குகிறார். ஏன் வீட்டை விற்றேன் என்பதற்கும் நெப்போலியன் காரணம் கூறியுள்ளார்.
‛‛நான் எம்எல்ஏவாக, மந்திரியாக இருந்தேன். அரசியலில் இருந்தேன். நான் இன்னமும் அந்த வீட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு பலர் மனு கொடுக்கிறார்கள். உதவிகள் கேட்கிறார்கள். நான் எப்போதாவது ஒருமுறைதான் இந்தியா வருகிறேன். அப்போது வீட்டில் ஆயிரக்கணக்கான மனுக்கள் சேர்ந்து இருக்கும். என்னால் எதுவும் செய்ய முடியாத நிலை. அதனால், அவர்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக வீட்டை விற்றுவிட்டேன்'' என்று கூறியிருக்கிறார்.
அந்த தொகுதி மக்கள் ஒட்டு போட்டுத்தானே ஜெயிச்சிங்க , பதிவிக்கான பென்ஷனும் வருமில்ல.. அதை வேனாம்னு எழுதி குடுத்தாச்சா..