உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2 ரிலீஸ் : சென்னையில் ரசிகர்களுடன் படம் பார்க்கும் படக்குழு

ஜெயிலர் 2 ரிலீஸ் : சென்னையில் ரசிகர்களுடன் படம் பார்க்கும் படக்குழு

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 படம் உலகமெங்கும் நாளை வெளியாக உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் படத்தை வரவேற்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இன்றே பல ஊர்களில் ஜெயிலர்2 படத்தை வரவேற்பு வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவிட்டன. பல தியேட்டர்களில் தோரணங்கள், கட்அவுட், பேனர் ஆகியவை களை கட்டுகின்றன. ஏற்கனவே, ஜெயிலர்2 படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டார். தவிர, அவர் படம் வெளியாகும் நாளில் தியேட்டரில் சென்று பார்ப்பது கிடையாது. எனவே, நாளை படக்குழுவினர் மட்டும் சென்னையில் ஒரு தியேட்டரில் படம் பார்க்க இருக்கிறார்கள்.

நாளை காலை படம் குறித்து இயக்குனர் நெல்சன் பேச வாய்ப்புள்ளது. இசையமைப்பாளர் அனிருத்தும் அவர்களுடன் அமர்ந்து படம் பார்க்க உள்ளார். அவருக்கு அடுத்த தீபாவளி தலை தீபாவளி என்பதால், பேச்சுலராக அவர் பார்க்கும் கடைசி படமாக ஜெயிலர் 2 அமையும். ரஜினியின் மகள்களும் நாளைக்கு ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க உள்ளனர்.

ஜெயிலர் 2 படத்துடன் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடித்த ரணபாலி படமும் வருகிறது. ஆனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் எந்த விளம்பர நிகழ்ச்சியும் இல்லை. முதல்வர் விஜயை பார்க்க சென்னை வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மீடியா சந்திக்கவில்லை. விஜய் தேவரகொண்டா நடித்த பல படங்களில் தமிழில் ஓடவில்லை. அதனால், அவர்கள் தமிழில் கவனம் செலுத்தவில்லை. ஜெயிலர் 2 ரிலீஸ் காரணமாக ரணபாலி படத்துக்கு மிகக்குறைவான தியேட்டர்கள் கிடைத்ததும் அவர்கள் புறக்கணிப்புக்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !