உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் கார் வாங்கிய 'பிரேமலு' ஹீரோ

2 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் கார் வாங்கிய 'பிரேமலு' ஹீரோ


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மமிதா பைஜூ மற்றும் நஸ்லேன் இருவர் நடிப்பில் வெளியான 'பிரேமலு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த நஸ்லேனும் ஓரளவுக்கு கவனம் ஈர்த்தார். அதற்கு முன்பே அவர் சின்ன சின்ன படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் தான் அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து கல்யாணி பிரியதர்ஷனுடன் இணைந்து இவர் நடித்த 'லோகா: சாப்டர் 1 சந்திரா' மற்றும் இவர் தனியாக நடித்த 'ஆழப்புலா ஜிம்கானா' மற்றும் 'மல்லுவுட் டைம்ஸ்' ஆகிய படங்கள் இவரை ஓரளவுக்கு முன்னணி வரிசைக்கு உயர்த்தின.

இப்போது தமிழில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சீன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் முதன் முறையாக தனது முதல் ஆடம்பர எஸ்யூவி காராக ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோ பயோகிராபி மாடலை வாங்கியுள்ளார். கொச்சியில் காரின் எக்ஸ் ஷோரூம் விலை 1.60 கோடியாக இருந்தாலும் பதிவு கட்டணம் மற்றும் வரிகள் எல்லாம் சேர்த்து ஆன் ரோடு விலையாக 2.03 கோடி வரை ஆகிறது. கொச்சியில் உள்ள ஷோரூமில் அவர் காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !