ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' பட நடிப்பு குறித்து சல்மான்கான் கூறிய கருத்து வைரல்!
'காபி வித் கரண்' சீசன்- 9ன் முதல் அத்தியாயத்தில் சல்மான்கான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கரீனா கபூரின் சகோதரியான கரிஸ்மா கபூர் ஒரு ஆச்சரியமான தோற்றத்தில் பங்கேற்றார். அவர் தொகுப்பாளராக மாறி சல்மான்கானிடம் சுவாரஸ்யமான கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.
'அனிமல்' படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் 'துரந்தர்' படத்தில் ரன்வீர் சிங் - இவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு, சல்மான் கான் ராஜதந்திரமான ஒரு பதிலைக் கூறினார். அதாவது, அந்த இரு கதாபாத்திரங்களும் முற்றிலும் வேறுபட்டவை என்று அவர் தெரிவித்தார். மேலும், ரன்வீர் சிங்கின் நடிப்பைப் பற்றி அவர் கூறுகையில், ''குறிப்பாக துரந்தர் படத்தில் ரன்வீர் தனது வழக்கமான பிரம்மாண்டமான ஆற்றலையும், அது சார்ந்த விஷயங்களையும் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. அந்த பெரிய ஆற்றலை அவர் பெருமளவில் அடக்கி வாசிக்க வேண்டியிருந்தது. ஒரு நடிகராக அவரிடம் எந்தத் தயக்கமும் இல்லை. அந்த துரந்தர் கதாபாத்திரத்திலும் சரி, ஒரு நடிகராகவும் அவர் மிகவும் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருந்தார்'' என்றார். சல்மான்கானின் இந்தக் கருத்து இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.