உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரொமான்டிக் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் கிர்த்தி ஷெட்டி!

ரொமான்டிக் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் கிர்த்தி ஷெட்டி!


தமிழில், 'வா வாத்தியார், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படங்களுக்கு பிறகு இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் நாயகனாக அறிமுகமாகும் 'லவ்வர் பாய்' என்ற படத்தில் நடித்து வருகிறார் கிர்த்தி ஷெட்டி. அதைத்தொடர்ந்து தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில், நந்தமூரி கல்யாண் ராமுடன் இணைந்து 'ஜனவரி 12 விடுதலை' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு ரொமான்டிக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் கிர்த்தி ஷெட்டி. திருப்பதி கோவிலுக்கு சென்று வெங்கடேசப் பெருமானின் ஆசி பெற்ற பிறகு, படக்குழுவினர் இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

பெயரிடப்படாத இந்தப் படத்தின் மூலம், திரைப்படத் தயாரிப்பாளர் ரோகித் ஷெட்டியிடம் 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ள விதி கோத்கோண்கர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். அபிஷேக் எஸ். வியாசுக்கு சொந்தமான ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கதாநாயகன் யார் என்ற பெயரை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !