உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உலகம் முழுதும் ரிலீசானது 'ஜெயிலர் 2': ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

உலகம் முழுதும் ரிலீசானது 'ஜெயிலர் 2': ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்


ரஜினிகாந்த் நடிப்பில், அனிருத் இசையில், நெல்சன் இயக்கத்தில் இன்று (அக்.,15) உலகம் முழுவதும் ரிலீசானது 'ஜெயிலர் 2'. முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு, மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடித்துள்ளனர்.

கூடுதலாக எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், நமோ நாராயணா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள், டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகரித்தது.

அந்த வகையில் இன்று ரிலீசான 'ஜெயிலர் 2' படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முந்தைய ஜெயிலர் படம் 600 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், 'ஜெயிலர் 2' படம் அதனை முறியடிக்குமா என்பது வரவேற்பை பொறுத்து தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !