ஓடிடி ரசிகர்களை குஷிப்படுத்த வரும் மண்டாடி....! : இந்தவார லிஸ்ட்
வாரந்தோறும் தியேட்டர்களில் புதுப்படங்கள் வெளியாவதைப் போன்று, ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. என்ன தான் தியேட்டரில் ரசித்துப் பார்த்தாலும், குடும்பத்துடன் ஓடிடியில் பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்படி இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்துத் தெரிந்து கொள்வோம்.
மண்டாடி
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ் மற்றும் ரவீந்திர விஜய் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மண்டாடி'. பாய்மர படகு போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. உலகளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.
கலீபா : தி ரூலர் (Khalifa: The Ruler)
மலையாள இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கலீபா: தி ரூலர் (Khalifa: The Ruler)'. தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் மோகன்லால், டொவினோ தாமஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.
எபிக்-பர்ஸ்ட் செமஸ்டர் (Epic - First Semester)
தெலுங்கு இயக்குநர் ஆதித்யா ஹாசன் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வைஷ்ணவி தன்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'எபிக் - பர்ஸ்ட் செமஸ்டர்'. இந்த படம் நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
பிரதம திருஷ்டியா குட்டக்கார் (Pradhama Drishtiya Kuttakkar)
மலையாள இயக்குநர் ஷாஹாத் இயக்கத்தில் விஜயராகவன், மேத்யூ தாமஸ், சித்தார்த் பரதன், உன்னிமய பிரசாத், அஷீஸ் நெடுமங்காடு, வினய் போர்ட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'பிரதம திருஷ்டியா குட்டக்கார் (Pradhama Drishtiya Kuttakkar)'. ரூ.25கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்த திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
ஐஸ்(Eyes)
மலையாள இயக்குநர் மனு அசோகன் இயக்கத்தில் கனி குஸ்ருதி, நிகிலா விமல் நடித்துள்ள சைக்கலாஜிக்கல் திரில்லர் வெப் சீரிஸ் 'ஐஸ் (Eyes)'. இந்த வெப் தொடர் சோனி லைவ்வில் நாளை வெளியாகவுள்ளது.