உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: கமல்ஹாசனை கதாநாயகனாக்கியது யார் தெரியுமா?

பிளாஷ்பேக்: கமல்ஹாசனை கதாநாயகனாக்கியது யார் தெரியுமா?

இந்திய சினிமாவில் போற்றப்படக்கூடிய படங்களை இயக்கியவர்களில் ஒருவர். சத்யஜித்ரே, ஷியாம் பெனகல், கே.பாலச்சந்தர், அடூர் கோபால கிருஷ்ணன். இந்த வரிசையில் இன்னொரு இயக்குநர் இருந்தார் அவர் சேது மாதவன்.

பால் மணம் (1968), கல்யாண ஊர்வலம் (1970), நாளை நமதே (1975), நிஜங்கள் (1982), மறுபக்கம் (1991), நம்மவர் (1994) போன்ற படங்களை இயக்கியவர். இதில் அனைத்துமே வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்கள். அதோடு 'மறுபக்கம்' தேசிய விருது பெற்ற படம். உங்கள் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று எம்ஜிஆரே விரும்பி கேட்டு நடித்த படம் 'நாளை நமதே'. அதேபோல கமல்ஹாசன் விரும்பி கேட்டு நடித்த படம் 'நம்மவர்'. இரண்டு படங்களுமே இரண்டு நடிகர்களுக்கும் முக்கியமான படமாக அமைந்தது.

45 ஆண்டுகாலம் திரைக் கலையில் தொடர்ந்து இயங்கி வந்தார். 50க்கும் மேற்பட்ட படங்களில் இணை, துணை இயக்குனராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்தியா அதுவரைக்கும் கண்டிராத அளவில் பிரம்மாண்டமான படம் 'சந்திரலேகா' (1948). 'மார்க்கண்டேயா' (1935), 'பாதுக பட்டாபிஷேகம்' (1936), 'கன்னியின் காதலி' (1949), 'ஏழை படும் பாடு' (1950) 'மர்மயோகி' (1951) 'தாய் உள்ளம்' (1952), 'விடுதலை' (1954), 'சுகம் எங்கே' (1954) போன்ற படங்கள் அவற்றில் முக்கியமானவை.

'கண்ணும் கரளும்' (1962) என்ற மலையாளப்படத்தில் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். 1974-ல் 'கன்னியாகுமாரி' மலையாளப் படம் வழியாக கமல்ஹாசனை முதன்முதலில் கதாநாயகனாக நடிக்க வைத்தவரும் கே.எஸ்.சேதுமாதவன்தான். மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார்.

10 தேசிய விருதுகள், 10 கேரள அரசு விருதுகள், ஒரு ஆந்திர அரசு விருது, உள்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர் கே.எஸ்.சேதுமாதவன். அவரது ஒரேயொரு தெலுங்குத் திரைப்படமான 'ஸ்த்ரீ' (1995) பல விருதுகளை வென்ற படம். 1975-ல் இந்தியில் அவர் இயக்கிய 'ஜூலி' எனும் படம் கலை ரீதியாகவும் வணிகரீதியாகவும் சாதனை படைத்த வெற்றி. அதன் பாடல்கள் இன்றளவும் உலகெங்கும் ஒலித்து வருபவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !