திரிஷ்யம் 3 ஹிந்தி பதிப்பை வெளியிட தடை கோரி ஸ்ரீப்ரியா வழக்கு
மலையாளத்தில் உருவான 'திரிஷ்யம் 3' திரைப்படத்தைத் தழுவி ஹிந்தியில் அதேபெயரில் படம் ரீ-மேக் ஆகி உள்ளது. அஜய் தேவ்கன், தபு உள்ளிட்டோர் நடிக்க, அபிஷேக் பதக் இயக்கியுள்ளார். இந்த படத்தை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரி ஸ்ரீப்ரியாவின் ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை நாடி உள்ளது.
'வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ்' மற்றும் இதர தயாரிப்பு நிறுவனங்கள் 'திரிஷ்யம் 3' ஹிந்தி பதிப்பை உலகளவில் வெளியிடவோ, விநியோகம் செய்யவோ அல்லது அதன் உரிமைகளைப் பயன்படுத்தவோ தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீப்ரியாவின் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது
'த்ரிஷ்யம் 3' திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை எதிர்காலத்தில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவது தொடர்பாக தங்களுக்குள்ள ஒப்பந்த மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை பாதுகாப்பதற்காகவே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எதிர்மனுதாரர்களின் பதில் மனுவைத் தாக்கல் செய்வதற்கும், மனுவை விசாரித்து முடிவு செய்வதற்கும் வழக்கை அக்டோபர் 1, அன்று மீண்டும் விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது.