உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்டோபர் முதல் வாரத்தில் 5 படங்கள் ரிலீஸ்

அக்டோபர் முதல் வாரத்தில் 5 படங்கள் ரிலீஸ்

2026ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் நாளையுடன் முடிவடைகிறது. செப்டம்பர் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான கடந்த வாரத்துடன் இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 170ஐக் கடந்துள்ளது. தற்போது காலாண்டு விடுமுறைத் தேர்வு உள்ளதால் இந்த விடுமுறை நாட்களைப் பயன்படுத்திக் கொள்ள சில முக்கியமான படங்கள் வெளியாகின்றன.

அக்டோபர் 1ம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா', நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்களும், அக்டோபர் 2ம் தேதி அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்', சந்தீப் கிஷன் பரியா அப்துல்லா நடித்துள்ள 'சிக்மா', அசோக், யுகன் நடித்துள்ள 'கிட்டி' ஆகிய படங்களும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 1ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த 'மிஸ்டர் பாரத்' படம் பற்றிய எந்த சத்தமும் இல்லை. அதனால், அன்றைய தினம் இப்படம் வெளியாக வாய்ப்பில்லை.

கடந்த வாரம் வெளியான படங்களில் 'மீசைய முறுக்கு 2' படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. மற்ற படங்கள் மிகச் சுமாரான வசூலையே பெற்றுள்ளன. இந்த வாரம் வெளியாக உள்ள புதிய படங்களால் கடந்த வாரம் வெளியாகி சரியாக ஓடாத படங்களுக்கு பாதிப்புகள் வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !