உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மனதார வாழ்த்தும் 4 பேர் இருந்தால் போதும்: தனது திருமணம் பற்றி அஞ்சலி கருத்து

மனதார வாழ்த்தும் 4 பேர் இருந்தால் போதும்: தனது திருமணம் பற்றி அஞ்சலி கருத்து


'அங்காடி தெரு' எனும் தமிழ் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷால் ஜோடியாக இவர் நடித்த 'மகுடம்' படம் தோல்வியடைந்தது. அடுத்து, வரும் அக்டோபர் 1ம் தேதி இவர் நடித்த 'ஏழு கடல் ஏழு மலை' ரிலீசாகிறது.

40 வயதாகும் அஞ்சலி இதுவரை திருமணம் செய்யவில்லை. இதுப்பற்றி பல காலமாக அவரிடம் கேட்கப்பட்டு, அவரும் பதில் சொல்லியுள்ளார். இருந்தும் சில ஆண்டுகளாக அந்த கேள்விகள் வராமல் இருந்தது. தற்போது பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவரிடம் மீண்டும் திருமணம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

திருமணம் பற்றி அஞ்சலி கூறியதாவது: என்னை நேரில் சந்திக்கும் பலரும் முதலில், “எப்போது கல்யாணம்?” என்றுதான் கேட்கின்றனர். என் கல்யாணத்தை நான் எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்வேன். அதில் மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று புரியவில்லை. கல்யாணம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் கிடையாது, கல்யாணத்திற்கு பின்னால் ஒரு பெண்ணுடைய வாழ்க்கையே மாறுகிறது. பல விஷயங்களை அவள் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி பல சிரமங்களும் பொறுப்புகளும் இருக்கும்போது, எதற்காக திரும்பத் திரும்ப இந்த ஒரே கேள்வியை கேட்கிறீர்கள்?

எனக்கு எப்போது திருமணம் நடந்தாலும், மனதார வாழ்த்துகிற நாலு பேரோ அல்லது நாற்பது பேரோ இருந்தால் மட்டும் போதும். அவர்கள் மட்டும் என்னுடைய கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தினால் போதும். ஆடம்பரமான கூட்டம் எனக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !