பொருத்தமானவர் இன்னும் தென்படவில்லை : திருமணம் குறித்து நித்யா மேனன் பதில்
நடிகை நித்யா மேனன் இயல்பான அதேசமயம் நகைச்சுவை கலந்த குணச்சித்ர நடிப்புக்கு பெயர் பெற்றவர். கடந்த வருடங்களில் வெளியான தலைவன் தலைவி, இட்லி கடை படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவர் தற்போது ஹிந்தியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் கிரே என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இன்னொரு பக்கம் அவரது சக நடிகைகள் திருமண வாழ்க்கையில் நுழைந்து விட்ட நிலையில் நித்யா மேனன் திருமணத்தை தவிர்க்கிறாரா என்கிற கேள்விக்கு சமீபத்தில் விளக்கமாக பதில் அளித்துள்ளார் நித்யா மேனன்.
“நான் திருமணத்திற்கு எதிரானவள் என்பது போல பலர் கூறுகின்றனர், ஆனால் அது உண்மை அல்ல. திருமணம் செய்து கொள்ளவும் பொருத்தமான துணையை கண்டறியவும் எனக்கும் ஆசை உண்டு. ஆனால் இதுவரை சந்தித்தவர்களில் நான் விரும்பும் வாழ்க்கைக்கு பொருத்தமானவரை இன்னும் கண்டறியவில்லை. தற்போதைய எனது வாழ்க்கை மிகவும் அழகாகவும் அமைதியாகவும் உள்ளது. அந்த அமைதியை கெடுக்கும் எந்த ஒரு விஷயத்திலும் நான் ஏன் இறங்க வேண்டும்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் நித்யா மேனன்.