உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அட்டையைப் பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதீர்கள் : எதிர்மறை விமர்சனங்களுக்கு சல்மான் கான் பதில்

அட்டையைப் பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதீர்கள் : எதிர்மறை விமர்சனங்களுக்கு சல்மான் கான் பதில்

பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் மாத்ருபூமி. அபூர்வ லகியா இயக்கியுள்ள இந்த படம் கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நடைபெற்ற மோதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது, இதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக இந்த டிரைலரில் ஏஐ மற்றும் விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பலர் எதிர்மறை விமர்சனங்களை பரப்பி வருகின்றனர்.

இது குறித்து சமீபத்தில் பதில் அளித்த சல்மான் கான், “அட்டையை பார்த்து ஒரு புத்தகத்தை எப்போதும் மதிப்பிடக்கூடாது, என்னைப் பற்றியோ அல்லது என் படத்தை பற்றியோ எதிர்மறையாக பேசுவதன் மூலம் மற்றவர்களுக்கு வியூஸ் கிடைத்து அவர்கள் பயனடைகிறார்கள் என்றால் எனக்கு அதில் மகிழ்ச்சியே. படத்தின் காட்சி அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை தாண்டி நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள் தியாகத்தையும் கதையின் உணர்வையும் முதன்மையாக கவனிக்க வேண்டும். படத்தின் முழுமையான அம்சங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது தெரியவரும், விமர்சனங்களுக்கு படம் தகுந்த பதில் அளிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !