மகனின் படத்திற்கு அப்பா பேச, அப்பாவின் படத்திற்கு மகன் பேச… வித்தியாச வீடியோ
திரையுலகில் சில விஷயங்கள் எப்போதாவது அபூர்வமாக நடக்கும். அப்படி ஒரு அபூர்வமான விஷயம் நேற்று இந்தியத் திரையுலகத்தில் நடந்துள்ளது. மலையாள நடிகர்களான அப்பா மம்முட்டி, மகன் துல்கர் சல்மான் இருவரும் வெவ்வேறு மொழிகளில் நடித்த படங்கள் நேற்று நவம்பர் 20ம் தேதி ஒரே நாளில் வெளியாகின.
அப்பா மம்முட்டி தமிழில் நடித்த 'ஓம்', மகன் துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்த 'ஆகாசம்லோ ஒக தாரா' ஆகிய இரண்டு படங்கள்தான் அந்த வெவ்வேறு மொழிப் படங்கள்.
அப்பா மம்முட்டியும், மகன் துல்கர் சல்மானும் இணைந்து நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே உண்டு. ஆனால், நேற்று இருவரும் இணைந்து அவர்களது படங்களுக்காக வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
மகன் துல்கர் சல்மானின் தெலுங்கு படத்திற்குகாக அப்பா மம்முட்டி தெலுங்கில் பேச, அப்பா மம்முட்டியின் தமிழ்ப் படத்திற்கு துல்கர் தமிழில் பேச, அந்த வீடியோவை இருவரும் பகிர்ந்துள்ளனர்.
அப்பா மகனின் இந்த வித்தியாச வீடியோ படத்திற்கு சிறப்பான விளம்பரமாக அமைந்துள்ளது.