மம்முட்டி, மோகன்லால் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் தற்கொலை
மலையாளத் திரையுலகைச் சேர்ந்த விஎப்எக்ஸ் கலைஞரும் நடிகருமான ஹரி முரளி என்பவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான ஹரி முரளி, ரசிகன் என்கிற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மம்முட்டியின் அண்ணன் தம்பி, பட்டணத்தில் பூதம், மோகன்லாலின் மாடம்பி, உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட சுமார் 50 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். தற்போது விஎப்எக்ஸ் கலைஞராக பணியாற்றி வருகிறார்..
இந்த நிலையில் சமீபத்தில் அதிகாலை 5 முக்கால் மணி அளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஹரி முரளி.. இத்தனைக்கும் எர்ணாகுளத்தில் இருந்து அவரது தம்பி, அண்ணனையும், அம்மாவையும் பார்க்க வந்து கொண்டிருந்ததாகவும், வெளியே செல்ல பயணம் திட்டமிட்டு இருந்த அந்த சமயத்தில் தான் திடீரென தற்கொலை எண்ணம் தோன்றி அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றும் அவரது குடும்பத்துடன் நெருங்கிய நட்பில் இருக்கும் நடிகை சீமா தெரியப்படுத்தியுள்ளதுடன் ஹரி முரளி மரணம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.