உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் ஒரு அசாதாரணமான கலைஞர் : அமிதாப் பச்சனின் சமீபத்திய பாராட்டு

தனுஷ் ஒரு அசாதாரணமான கலைஞர் : அமிதாப் பச்சனின் சமீபத்திய பாராட்டு

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கடந்த 18 வருடங்களாக கோன் பனேகா குரோர்பதி என்கிற நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். தற்போது இதன் 18 வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர் ஒருவர் அமிதாப்பிடம் பேசும்போது, தான் தனுஷின் தீவிர ரசிகர் என்று கூறினார். உடனே அமிதாப்பச்சனும் பதிலுக்கு நானும் அவருடைய தீவிர ரசிகன், என்று கூறினார்.

“ஷமிதாப் படத்தில் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது, அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தேன், கொஞ்சம் தெரிந்தும் வைத்திருந்தேன், ஆனால் அவருடன் பணியாற்றிய போது நடிப்பை பார்த்த பிறகு தான் உண்மையிலேயே அவர் ஒரு அசாதாரண கலைஞர் என்பதை உணர்ந்தேன்'' என்று பாராட்டியுள்ளார்.

கடந்த 2015ல் பால்கி இயக்கத்தில் அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் என்கிற படத்தில் தனுஷ் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !