உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியிடம் அடிக்கடி கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்த ராஷி கண்ணா

ரஜினியிடம் அடிக்கடி கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்த ராஷி கண்ணா

‛இமைக்கா நொடிகள்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ராஷி கண்ணா அதன் பிறகு தமிழில் சீரான இடைவெளியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவரது திரையுலக பயணத்தில் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தர்மன் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்துடன் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் ராஷி கண்ணா.

அவர் கூறும்போது, “படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் எனக்கு ஒரு நல்ல நண்பரை போல மாறிவிட்டார், அவரிடம் நிறைய பேசுகிறேன், அடிக்கடி கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்கிறேன், ஆனாலும் அவர் மிகவும் எளிமையானவர், எனது அனைத்து கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாக பதில் அளிப்பார், அவர் அருகில் இருக்கும் போது ஒரு குழந்தை போல் உணர்கிறேன். அந்த வகையில் தர்மன் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதை மிகவும் ரசித்து வருகிறேன், ரசிகர்களைப் போல நானும் தர்மன் படத்தை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !