வினித் சீனிவாசனின் சடங்கு படப்பிடிப்பு நிறைவு
ADDED : 14 minutes ago
நடிகர் வினித் சீனிவாசன் மலையாள திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் மாறி மாறி பயணித்து வருகிறார். கடந்த 2024ல் இவர் இயக்கிய வர்ஷங்களுக்கு சேஷம் மற்றும் கடந்த வருடம் இவர் இயக்கத்தில் வெளியான கரம் ஆகிய படங்கள் இவருக்கு வெற்றியை தரவில்லை. இதனை தொடர்ந்து தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான அதிரடி படத்தில் காமெடியில் கலக்கி இருந்த வினித் சீனிவாசன் தற்போது சடங்கு என்கிற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அபிஜித் ஆர்யா என்பவர் இயக்கும் இப்படம் மலபார் பகுதியில் உள்ள ஒரு வீட்டை மையமாகக் கொண்ட குடும்ப நகைச்சுவை மற்றும் ஹாரர் கலந்து உருவாகியுள்ளது. கதாநாயகியாக மீனாட்சி மாதவன் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சோனா நாயர் நடித்துள்ளார்.