உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீ ரிலீஸில் வசூலை குவித்த சனம் தேரி கசம் - ஹீரோவுக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்.

ரீ ரிலீஸில் வசூலை குவித்த சனம் தேரி கசம் - ஹீரோவுக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்.

ஹிந்தியில் கடந்த 2016ல் சனம் தேரி கசம் திரைப்படம் வெளியானது. நடிகர் ஹர்ஷவர்தன் ராணே நடித்த இந்த படத்தை ராதிகா ராவ் மற்றும் வினய் சப்ரு இணைந்து இயக்கியிருந்தனர். ஆனால் படம் வெளியான சமயத்தில் எதிர்பார்த்த வசூலை பெற தவறியது.. கடந்த வருடம் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆச்சரியமாக இந்தியாவில் 42 கோடி மற்றும் உலக அளவில் சுமார் 54 கோடி என மிகப்பெரிய வசூலை குவித்தது.

இதனை தொடர்ந்து பட தயாரிப்பாளர் ஏற்கனவே ஹீரோ ஹர்ஷவர்தன் ராணேவுக்கு கொடுத்த வாக்கின்படி சுமார் 3.5 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் சொகுசு கார் ஒன்றை அவருக்கு பரிசாக தற்போது வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து ஹீரோ ஹர்ஷவர்தன் ராணேவும் அடுத்த மாதம் வரும் தனது பிறந்தநாளில் தயாரிப்பாளரின் அலுவலகத்திற்கு வருவதாகவும், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஒப்புதல் வழங்குமாறும், கதை மற்றும் இயக்குனரை தயாரிப்பாளரே தேர்வு செய்து கொள்ளலாம் என்றும், தன்னுடைய ரசிகர்களின் பிறந்தநாள் ஆசையாக இதை நிறைவேற்றுவீர்களா என்றும் தயாரிப்பாளருக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !