உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமெரிக்காவில் ஸ்பெஷலாக நடந்த 'ராமாயணா' பிரஸ் ஷோ

அமெரிக்காவில் ஸ்பெஷலாக நடந்த 'ராமாயணா' பிரஸ் ஷோ

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் நவம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தை இந்திய மொழிகளில் மட்டுமல்லாது ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் திரையிட திட்டமிட்டுள்ளார்கள்.

அமெரிக்காவில் மற்ற இந்தியப் படங்கள் திரையிடப்படுவதை விட, இப்படத்தை அதிக அளவில் திரையிட முயற்சி மேற்கொண்டுள்ளார்கள். இப்படத்திற்கான பிரம்மாண்டமான பிரிமியர் ஷோ லாஸ் எஞ்சல்ஸ் நகரில் அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ளது.

அதற்கு முன்பாக அமெரிக்காவின் பத்திரிகையாளர்களுக்காக ஸ்பெஷல் காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. படத்தின் நீளம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டு பாடல்கள் இல்லாமல் ஆங்கில டப்பிங் படமாக திரையிடப்பட்டுள்ளது. ஏஐ மூலம் 'லிப் சின்க்' ஆகும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

படத்தைப் பார்த்தவர்கள் படம் பிரம்மாண்டமாக உள்ளதாகத் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !