உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெளியீட்டுக்கு முன்பே திரைக்கதையை புத்தகமாக வெளியிடும் இயக்குனர்

வெளியீட்டுக்கு முன்பே திரைக்கதையை புத்தகமாக வெளியிடும் இயக்குனர்

பொதுவாக ஒரு திரைப்படத்தின் திரைக்கதையைப் புத்தகமாக வெளியிடுவது என்பது பொதுவாக, அத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற பின்னரோ அல்லது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்ற பின்னரோ நடைபெறும் நிகழ்வாக இருந்து வருகிறது.

இத்தகைய நடைமுறைக்கு மாறாக, 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்', 'ஆதார்' ஆகிய திரைப்படங்களை இயக்கியவரும் 'திண்டுக்கல் சாரதி' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவருமான இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும்'சென்சார்' என்ற படத்தின் திரைக்கதையை புத்தகமாக வெளியிடுகிறார் ராம்நாத்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ் சினிமாவில், திரையில் நட்சத்திரங்களைக் கொண்டாடிய பிறகே நாம் பெரும்பாலும் திரைக்கதையைக் கொண்டாடுகிறோம். 'சென்சார்' திரைப்படத்தின் திரைக்கதையைப் படம் வெளியாவதற்கு முன்பே புத்தகமாக வெளியிடுவதன் மூலம், கதையை அதன் அசல் வடிவத்தில் வாசகர்கள் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். திரையில் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்பே, அது உருவான எழுத்து உலகத்திற்குள் வாசகர்கள் பயணிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இது வெளிப்படைத்தன்மையை நோக்கிய ஒரு முயற்சி மட்டுமல்ல; தமிழ் சினிமாவில் எழுத்துக்கும் திரைக்கதை ஆசிரியர்களின் படைப்பாற்றலுக்கும் உரிய முக்கியத்துவத்தை அளிக்கும் ஒரு முன்னெடுப்பு ஆகும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !