உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாரதிராஜாவின் கடைசி படமான ‛புலவர்' அக்., 30ல் ரிலீஸ்

பாரதிராஜாவின் கடைசி படமான ‛புலவர்' அக்., 30ல் ரிலீஸ்

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே படம் தொடங்கி, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது எனப் பல சிறந்த மண் வாசனை படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குநர் பாரதிராஜா. பிறகு பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் வந்தார்.

கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி காலமான பாரதிராஜா, கடைசியாக முருகையா இயக்கத்தில் புலவர் என்ற படத்தில் முதன்மை ரோலில் நடித்திருந்தார். இப்படம் தற்போது திரைக்கு வரத் தயாராகி உள்ளது. படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ள படக்குழு, வருகிற அக்டோபர் 30ம் தேதி இந்த படம் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளது.

இயக்குனர் பாரதிராஜா நடித்த கடைசிப் படம் என்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் டிரெய்லரில் பாரதிராஜா சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !