ரன்பீர் கபூருக்கும் மிரட்டல்
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, பாலிவுட் பிரபலங்கள் தங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, ஹிந்தி நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை அடுத்து சல்மான்கானுக்கு செக்யூரிட்டி பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய தகவல்களின்படி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அக்ஷய் குமார் தனது பங்களாவில் குண்டு துளைக்காத புல்லட் ப்ரூப் ஜன்னல்களைப் பொருத்தியுள்ளார். அவரை தொடர்ந்து தற்போது ராமாயணா படத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூருக்கும் ஒரு மிரட்டல் செய்தி வந்ததாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் இப்போது அவருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.
இப்படி மிரட்டல் பட்டியல் அதிகரித்து வருவதால் தற்போது பாலிவுட்டின் இன்னும் பல முக்கிய நடிகர்களும் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகிறார்கள். அதோடு பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு முன்னுரிமை அளிப்பதால் டோட்டல் பாலிவுட்டே பதட்டத்தில் காணப்படுகிறது.