ஓடிடி டிரெண்டிங்கில் 'மண்டாடி, என்ன விலை'
தமிழ் சினிமாவில் இரண்டு சிறிய ஹீரோக்களின் படங்கள் ஓடிடியில் டிரெண்டிங்கில் இருந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரி நடித்து வெளிவந்த 'மண்டாடி' படம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 8ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்படம் இப்போதும் உலக அளவிலான ஆங்கிலம் அல்லாத டாப் 10 படங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.
டாப் 10ல் இடம் பெற்றுள்ள மற்றொரு படமாக கருணாஸ் நடித்த 'என்ன விலை' படம் இடம் பெற்றுள்ளது. அக்டோபர் 15ம் தேதி வெளியான இப்படம் உலக அளவிலான டிரெண்டிங்கில் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய அளவிலான டிரெண்டிங்கில் மண்டாடி முதலிடத்திலும், 'என்ன விலை' 3இம் இடத்திலும் உள்ளன. 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் 6வது இடத்திலும், 'மொத ராத்திரி' படம் 10வது இடத்திலும் உள்ளன.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடித்துள்ள 'டோரதி' படம் இன்று இந்த ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்தப் படமும் டிரெண்டிங்கில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.