மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனருக்கு ஜோடியாக நடிக்கும் அன்னா பென்
ADDED : 19 hours ago
மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த படத்தை இயக்கியவர் சிதம்பரம். சமீபத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர் அடுத்ததாக இயக்கிய பாலன் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் தற்போது இவர் கதையின் நாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்
அவருக்கு ஜோடியாக கொட்டுக்காளி, கான் சிட்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அன்னா பென் நடிக்கிறார். ரொமான்டிக் காமெடி திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் வைசாத் ரீத்தா இயக்குகிறார். 2027 ஜனவரியில் இப்படத்தில் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்களாம்.