மோகன்லால் படத்தில் இணைந்த ட்ரிபிலட்ஸ் கெட்டோ கிட்ஸ் டீம்
கடந்த சில வருடங்களுக்கு முன்பு உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மேப்படியான் என்கிற வெற்றி படத்தை இயக்கியவர் விஷ்ணு மோகன். இவர் தற்போது மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ஆபரேஷன் கங்கா என்கிற படத்தை இயக்கி வருகிறார். 2022ம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் போரின் போது உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளில் சிக்கித் தவித்த இந்திய குடிமக்களை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட ஆபரேஷன் கங்கா மீட்பு பணியை மையமாகக் கொண்டு இப்பதான் உருவாகிறது. இதில் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால், தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட பத்து மில்லியனுக்கு அதிகமான பாலோயர்களை கொண்டுள்ள பிரபல நடன குழுவாக ட்ரிபிலட்ஸ் கெட்டோ கிட்ஸ் இப்படத்தில் இணைந்துள்ளது. இந்த ட்ரிபிலட்ஸ் கெட்டோ கிட்ஸ் என்பது ஏழை மற்றும் ஆதரவற்ற சிறுவர்களை இசை, நடனம் மற்றும் நாடகம் மூலம் கை தூக்கி விடும் ஒரு தொண்டு அமைப்புடன் தொடர்புடைய புகழ்பெற்ற நடன குழுவாகும்.. 90களில் தான் நடித்த வர்ணப்பகிட்டு படத்தின் ஒகேனா ஓகேலா என்கிற பாடலுக்கு இந்த குழுவினருடன் நடனம் ஆடி இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார் மோகன்லால்.