உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வீட்டிற்கு புல்லட் புரூப் கண்ணாடி பொருத்தும் அக் ஷய் குமார்

வீட்டிற்கு புல்லட் புரூப் கண்ணாடி பொருத்தும் அக் ஷய் குமார்


சமீபத்தில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கால்பந்து பயிற்சி முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிய போது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் சிறிய காயங்களுடன் அவர் தப்பினார். ஆனால் குறி அவருக்காக வைக்கப்பட்டதல்ல இன்னொரு நடிகருக்காக என்றும் அது நடிகர் சல்மான் கான் தான் என்றும் கூட செய்திகள் வெளியாகின. இதனால் தற்போது சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்னும் சில நடிகர்கள் தாங்களே தங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் அக் ஷய் குமார் தனது வீட்டில் உள்ள கண்ணாடிகள் அனைத்தையுமே புல்லட் புரூப் பொருத்தப்பட்ட கண்ணாடிகளாக மாற்றும் வேலையில் இறங்கிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் அமீர்கானின் பாந்த்ரா இல்லம், இயக்குனர் ரோகித் ஷெட்டியின் ஜூஹூ இல்லம் ஆகியவற்றிற்கு வெளியே காவல்துறை ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !