உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛மூக்குத்தி அம்மன் 2' டிரைலர் வெளியீடு

‛மூக்குத்தி அம்மன் 2' டிரைலர் வெளியீடு

மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்த நயன்தாரா இதிலும் தொடருகிறார். ஆனால் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி அல்ல, சுந்தர் சி இயக்கி உள்ளார். முதல்பாகத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நயன்தாரா உடன் ரெஜினா, துனியா விஜய், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

தற்போது இதன் டிரைலர், ‛வேர்ல்டு ஆப் மகாசக்தி' என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இதில் நயன்தாரா பயந்த சுபாவம் கொண்ட பெண் போலீஸ் மற்றும் அம்மனாக இருவேறு பரிமாணங்களில் நடித்துள்ளார். ரெஜினா மற்றும் துனியா விஜய் ஆகியோர் தீய சக்திகளாக வில்லத்தனமான வேடத்தில் நடித்துள்ளனர். நிகழ்காலம் மற்றும் சரித்திரம் கலந்த படமாக உருவாகி உள்ளது. டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவ., 6ல் படம் ரிலீஸாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !