உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2 பார்க்க முழு தியேட்டரையும் புக் செய்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்

ஜெயிலர் 2 பார்க்க முழு தியேட்டரையும் புக் செய்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்

கேரளாவை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் சாம்சன் இந்திய அணி சார்பாக டி20 மேட்ச்களிலும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாகவும் விளையாடி குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் முதல்நாளே ரஜினியின் படங்களை பார்த்து விடும் அளவிற்கு அவரது தீவிரமான ரசிகர். இந்த முறை ஜெயிலர் 2 திரைப்படத்தை பார்ப்பதற்காக தனக்கும் தனது நண்பர்களுக்கும் சேர்த்து ஒரு முழு திரையரங்கையும் புக் செய்து படம் பார்த்துள்ளார் சஞ்சு சாம்சன். இது குறித்த தகவலை அவரே மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சஞ்சு சாம்சன் கூறும்போது, “எனக்கு ரஜினி சார் படங்களை பார்ப்பது மிகவும் பிடிக்கும். அவருடைய அடுத்த படத்திற்காக எப்போதுமே காத்திருப்பேன். ஜெயிலர் 2 ரிலீஸ் ஆன சமயத்தில் டில்லியில் ஒரு நிகழ்ச்சி இருந்ததால் முதல் நாள் பார்க்க முடியவில்லை. மறுநாள் பொதுவான திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பதற்கு பதிலாக நான், எனது மனைவி, நண்பர்கள் மற்றும் எனக்குத் தெரிந்த சக கிரிக்கெட் வீரர்கள், எங்கள் குழுவில் இருக்கும் தமிழ் தெரிந்த பல ஊழியர்கள் என பலருக்கும் சேர்த்து தனியாக ஒரு தியேட்டரையே அதிர்ஷ்டவசமாக புக் செய்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !