துப்பாக்கிச்சூடு: டைகர் ஷெராப்-க்கு முன்பு சல்மான்கான்தான் முதல் இலக்காம்!
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்படி, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராபின் இல்லத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதற்கு முன்பு, இந்த தாக்குதலின் முதல் இலக்காக சல்மான்கான்தான் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையிலுள்ள சல்மான்கானின் பாந்த்ரா இல்லத்தில் அவரை முதலில் குறி வைக்கத் திட்டமிட்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நடிகரின் அப்பார்ட்மென்ட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு காரணமாக அவர்கள் அந்தத் திட்டத்தைக் கைவிட்டதாகக் கூறியுள்ளார்கள்.
அந்த வகையில், முந்தைய மிரட்டல்களுக்குப் பிறகு சல்மானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அவரைப் பாதுகாக்க கமாண்டோக்களும் அதிநவீன ஆயுதங்களும் நிறுத்தப்பட்டுள்ளதால் அவர் இந்த தாக்குதலில் இருந்து தப்பியது தெரியவந்துள்ளது.