உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சல்மான் கானுக்கு பதிலாக இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய பிரபலம்

சல்மான் கானுக்கு பதிலாக இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய பிரபலம்

ஹிந்தி பிக்பாஸ் 20 சீசனை தொகுத்து வழங்கி வரும் நடிகர் சல்மான் கான் இந்த வாரம் தனக்கு பதிலாக பிரபல இயக்குனர் ரோகித் ஷெட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும், தனக்கு சில வேலைகள் இருக்கிறது என்றும், கடந்த நிகழ்ச்சியின் போதே போட்டியாளர்களிடம் கூறியிருந்தார். சமீபத்தில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி அதில் அதிர்ஷ்டவசமாக அவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். அதேசமயம் நடிகர் சல்மான் கானுக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை வந்ததை தொடர்ந்து அவருக்கும் தற்போது பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த வாரம் சல்மான் கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை என சொல்லப்படுகிறது.

ஹிந்தியில் சிங்கம், சிம்பா, சூரியவன்சி, சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற பல ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் ரோகித் ஷெட்டி. அது மட்டுமல்ல ஸ்டண்ட் சாகச நிகழ்ச்சியான கத்ரோன் கே கிலாடி என்கிற நிகழ்ச்சியையும் பல சீசன்களாக இவர் தொகுத்து வழங்கியுள்ளார். தவிர சல்மான்கானுக்காக இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குவது முதல் முறை அல்ல. ஏற்கனவே இதே போல ஒரு முறை ஒரு சீசனில் அவருக்கு பதிலாக சில நாட்கள் ரோகித் ஷெட்டி பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !