உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜூனின் 'ராக்கா' படத்தின் ஓராண்டு கவுண்டவுன் போஸ்டர் விரைவில் வெளியாகிறது!

அல்லு அர்ஜூனின் 'ராக்கா' படத்தின் ஓராண்டு கவுண்டவுன் போஸ்டர் விரைவில் வெளியாகிறது!


அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ராக்கா படக்குழுவினர், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் வகையில், புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமா வட்டாரங்களின் தகவல்படி, 'ராக்கா' படம் 2027ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாக இலக்கு நிர்ணயித்துள்ளது. திரையரங்க வெளியீட்டிற்கான ஓராண்டு கவுண்டவுனை குறிக்கும் போஸ்டரை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராக்கா படம் மாஸ் அம்சங்கள் நிறைந்த ஒரு சயின்ஸ் பிக்சன் அதிரடித் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில், அல்லு அர்ஜூன் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர் ஆகியோரும் இதில் நடிப்பதாக கூறப்பட்டாலும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ராக்கா படம் ரூ.600 - 700 கோடி மதிப்பிலான பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !